Feminism

0 Titles
தோழிகளே! ஆய்வூக்கமுள்ள பெண்ணிய ஆய்வாளர்களே!
வணக்கம்
பெண்ணியல் ஆராய்ச்சிக்கும், பெண்ணியம் பற்றி தொடர்ந்து உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான ஒரு வெளியை நீங்களே உருவாக்கிக் கொள்ள IOR பன்னாட்டு உரிமம் பெற்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வாய்ப்பு வழங்குகின்றது. உங்களுக்கான பக்கங்களை உங்களுக்கான புதிய அத்யாயங்களை நீங்களே எழுதுங்கள். ஆய்வுலகில் உங்களுக்கான இருப்பையும் வெளியையும் நீங்களே விஸ்தரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கானதொரு பதிய அடையாளத்தை புதிய பரிமாணத்தை உருவாக்கிக் கொள்ள ஊக்கம் கொள்ளுங்கள். பெண்ணரசியலை கூர்மைபடுத்த, பெண் என்ற தன்னடையாளத்தை வலுப்படுத்த நிருபனமான ஆய்வு முயற்சிகளையும், தொடர்ந்த காத்திரமான உரையாடல்களையும் முன்னெடுப்பது அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். தோழர் என்பதன் பின்னால் ஒரு கம்யூனிச அரசியல் இழையோடுகிறதைப்போல தோழி என்பதன் பின்னால் ஒரு பெண்ணரசியல் தீவிரப்படவேண்டும் என்பது எங்கள் எண்ணம். 21 நாட்களும் பெண்ணிய இயங்கியல் பன்மைத்துவ சொல்லாடல்கள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடாத்தி பெண்ணியல் சார்ந்த ஆய்வுப் பார்வைகளையும் கோட்பாட்டுச் சிந்தனைகளையும் அறிமுகப்படுத்திப் பலதரப்பட்டப் பெண்ணிய சொல்லாடல்களை (DISCOURSE) தமிழ்ச் சூழலில் பரவலாக நாங்கள் முன்னெடுத்ததன் நோக்கமும் அதுதான். இந்த கருத்தரங்கம் பெண்ணியம் சார்ந்து நம்முடைய புரிதலை ஆழப்படுத்தியிருக்கும், மாற்றுச் சொல்லாடல்களுக்கான களங்களை இனங்காட்டியிருக்கும், ஆய்வுப்பார்வையை கூர்மைபடுத்திருக்கும், அறிவின் பரப்பை விரிவுசெய்திருக்கும் அந்த அடிப்படையில் ஆய்வூக்கத்தோடு உங்கள் கருதுகோள்களை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக அளியுங்கள். பெண்ணிய ஆய்வியக்கமாக ஒன்றிணையுங்கள். உங்கள் ஆய்வுகளைத் தொகுத்து அச்சுப்பிரதியாக நுலாக்கம் செய்து தருவதுடன் எங்களின் தமிழாய்வுக்களஞ்சியம் என்ற வலைத்தரவுத் தளத்தில் பெண்ணிய ஆய்வியக்க கட்டுரைகள் எனும் தலைப்பில் மின்னூலாகவும் உருவாக்கி வெளியிடுகிறோம். களஆய்வு, வினாநிரல், நேர்காணல் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுக்கட்டுரைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.
மின்னூலாக்க வெளியீட்டால் ஆசிரியருக்குக் கிடைக்கும் நன்மைகள்
மின்னூலாக்க வெளியீட்டில், சர்வதேச DOI (Digital Object Identifier) எண் மற்றும் சர்வதேச புத்தக எண்ணுடன் (ISBN) வெளியிடப்படும் புத்தகங்கள்/அத்தியாங்களை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் திறந்த நிலையில் (open access) வெளியிடப்படும். இது தங்களின் புத்தகங்களை/ அத்தியாங்களை உலக அளவில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து படிக்கச் வழிவகை செய்யும். இதன் மூலம் தங்களின் புத்தகத்திற்கான (Citation Index) அதிகரிக்க செய்து, புத்தகத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும்.
1. புத்தகத்திற்கான அச்சுபிரதி மற்றும் ஆன்லைன் ISBN இரண்டும் ஒதுக்கப்படும்.
2. உலகில் முதல் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து தமிழ் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் அத்தியாயங்களுக்குமான DOI (Digital Object Identifier) எண் ஒதுக்கப்படும்.
3. ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்கள் மற்றும் அத்தியாயங்களுக்கான பயன்பாட்டினைச் சரிபார்க்க முடியும் (பதிவிறக்கங்கள் மற்றும் மேற்கோள்கள் எண்ணிக்கை)
4. எங்கள் இணையதளம் மூலம் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பதிவிறக்க முடியும்.
5. Thomson Reuters Book Citation Index சாத்தியம்.
6. உலகில் முதல் முறையாக தமிழ் புத்தகங்கள் மற்றும் அத்தியாயங்கள் திறந்த முறையில் (Google scholar index) வெளியிடப்படும்.
குறிப்புகள்
1. இணையப்பக்கத்தில் ISSN எண்ணுடன் மின்னூலாக வெளியிடுவதற்கும், ISBN எண்ணுடன் அச்சுப்பிரதியாக வெளியிடுவதற்கும் சேர்த்து ரூ.1500 மட்டும் செலுத்தினால் போதுமானது. நூல்கள் தங்களின் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
2. பெண் ஆய்வாளர்கள் மட்டுமே கட்டுரை அளிக்கவேண்டும். ஆண் ஆய்வாளர்கள் இரண்டாவது ஆசிரியராக (Second author) வேண்டுமானால் இணைந்து எழுதலாம். Corresponding author நிச்சயமாக பெண் ஆய்வாளராகத்தான் இருக்கவேண்டும்.
3. கட்டுரைகள் ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றி அதிகபட்சம் 15 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கலாம்.
மேலும் தகவல்கள் தேவைப்படின் சர்வதேசத் தமிழ் ஆய்விதழின் தலையங்க எண்ணை (9791748838) தொடர்பு கொள்ளலாம்.
ஆய்வுக்கட்டுரைகளை கீழ்கண்ட பொருண்மைகளின் அடிப்படையில் தொகுப்பு நூல்களாக வெளியிடத்திட்டமிட்டுள்ளோம்.
1. கருத்தியல் (IDEOLOGY)
2. பாலியல் (SEXUALOGY)
3. பாலினம் (BIOLOGY)
4. சமூகவியல் (SOCIOLOGICAL)
5. வர்க்கம் (CLASS)
6. பொருளாதாரமும் (ECONOMICS)
7. ஆற்றல் (FORCE)
8. மானுடவியல் (ANTHOROPOLOGY)
9. உளவியல் (PHYCHOLOGY)
10. கல்வி (EDUCATION)
11. இனம் (RACE)
12. சாதி (CAST)
13. மொழி (Language)
14. அரசியல் (Politics)
15. மதம் (Religion)
போன்ற நிலைகளில் பெண் ஒடுக்கப்படுவதாக இக்கருத்தரங்கினூடாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். தங்களது ஆய்வுகள் மேற்சுட்டிய ஏதேனும் ஒரு வகைப்பாட்டை மையமிட்டதாகவோ, இது தவிர தாங்கள் கண்டறிந்த வேறு ஏதேனுமொரு நிலைகளங்கள் சார்ந்ததாகவோ அமையலாம்.

All Books

##catalog.noTitlesSection##